இதயம் ஒருமுறை நெகிழ்ந்தால்
வாழ்வு கவிதையாக மாறும்
இதயம் ஒருமுறை நெகிழ்ந்தால்
வாழ்வு கவிதையாக மாறும்
என்னருகே நீ
இல்லை என்பது
உண்மை அவ்வளவு
உண்மை நீ என்னுள்
இருக்கிறாய் என்பதும்
உன் புன்னகை
என் உலகத்தைக் கவர்ந்தது
உன் மௌனம்
என் இதயத்தை
உன்னிடம் கட்டுப்படுத்தியது
கண்கள் சந்திக்கும் அந்த நொடி
புத்தகத்தில் அடையாளம்
வைக்கும் பக்கம் போல
உள்ளத்தை ஊடுருவும்
இசையாய் உயிர் வரை
ஊடுருவுகிறது
உன் நினைவிசை
இன்னிசையாய்
விழிகள் பேசும் மெளனம்
காதலின் ஆழமான மொழிபெயர்ப்பு
கண்களுக்கு அருகில்
இருப்பனத விட
இதயத்திற்கு அருகில்
இருப்பது நான் காதல்
பாசம் பேசும் போது
வார்த்தைகள் தேவையில்லை
தூரம் இருந்தாலும்
மூச்சில் அவளின் வாசனையே
தேடும் நெஞ்சம்
சிறகுகள் இல்லை என்னிடம்
உன்னை தேடி வர
ஆனால்
இதயம் இருக்கிறது என்றும்
உன்னை நினைத்திட