தூரம் அதிகமானால் என்ன?
அன்று உன் நிழலில்
பதுங்கி கொண்டவள்
இன்று உன் நிழற்படங்களை
பதுக்கி கொண்டிருக்கிறேன்
மூச்சுகள் ஒன்றோடொன்று
கலக்கும் போது
நேரமே நிற்கும்
ஓர் பார்வை பேசும் போது
வார்த்தைகள் தேவைப்படுவதில்லை
ஆழ்நிலை தியானத்திலும்
ஜெபிக்கின்றது
உன் பெயரையே மனம்
காதல் வேதமாய்
நெருக்கம் இல்லாத பாசம்
ஏதோ தொலைவில் இருக்கும்
சோக புன்னகை போலிருக்கு
தோளில் சாயும் அமைதி
உலகின் சத்தங்களை
அணைத்துவிடுகிறது
நினைவுகள் முழுவதையும்
நீ நிரப்பி விட்டதால்
இன்று நிழல்கள் கூட
உன்னை தான்
நினைவு படுத்துகின்றது
விரல்களில் நடந்த காதல்
உதடுகளில் உருகி சிரிப்பாயிற்று
என் காயங்களுக்கு
மருந்தாயிருக்கும்
நீ உன் துயரத்தில்
குழந்தையாகி விடுகிறாயே
எனையும்
சிறு பிள்ளையாக்கி
வெறும் பார்வையில்
வந்த பரவசம்
வார்த்தைகள் தேவைப்படவில்லை
💖 பக்கம் 100 / 478
📋 Copied