உள்ளங்கையில்
வெப்பம் ஏற்றுகிறாய்
மெல்ல குளிருது
உள்ளமும்
வெற்றிடம் என்பதே
கிடையாது
நீ வேரூன்றி
போனதால் உள்ளத்திலும்
நம்மை முழுவதும்
புரிந்துக் கொண்ட ஒருவர்
நம் வாழ்வில் இருப்பது
நமக்கு கிடைத்த
மிக பெரிய வரம்
உனக்காகக் காத்திருப்பதில் கூட
ஒரு சுகம் இருக்கிறத
அந்த நிமிடம் வரை
நீ என் நினைவுகளில்
மட்டுமே சொந்தமாகிறாய்
மழையென கொள்கிறேன்
உனை முழுமையாய்...
நனைத்து விடு
எனை
தினம் தினம்
உன் அன்பால்...
புரிதல்களால்
மௌனமான தருணங்கள் கூட
இருவரின் இதயங்களை
இணைக்க வல்லவை
உன் நினைவுகள்
கனவாக மாறினால்
என் வாழ்க்கை வரலாறு ஆகும்
மண்ணில் விழுந்த
மழை துளியாய்
உன் மனதோடு
தொலைந்து விட்டேன்
என்னுயிரே
தனித்திருக்கும்
போதெல்லாம்
மனம் உன்னிடமே
தாவுது...
ஒரே பார்வையில்
நாளை மறந்துபோகும் சக்தி
காதலுக்கு உண்டு
💖 பக்கம் 94 / 478
📋 Copied