காதல் என்பது
அழகின் பொருள் அல்ல
அது மனசின் பொக்கிஷம்
காதல் என்பது
அழகின் பொருள் அல்ல
அது மனசின் பொக்கிஷம்
உண்ணாத நாட்களுமுண்டு
உறங்காத நாழிகையும்
உண்டு
உனை எண்ணாத
நாட்களென்று
எதுவுமில்லை என்னுயிரே
தொடர்வதில் தவறு இல்லை
உணர்வில் மட்டுமே
பரிபூரண காதல் பிறக்கிறது
தமிழ் இலக்கணத்தில்
சொல்லும் பொருளும்
பிரிவதே இல்லையாம்
என்னை பிரியாத
உன் நினைவுகளை போல
வாழ்க்கையில்
வெற்றியோ தோல்வியோ
எது நடந்தாலும்
கடைசி வரைக்கும்
நான் உன்
கூடவே இருப்பேன்
அனலான
உன் நெருக்கத்தில்
தணலாகுது மனம்
அணைத்துவிடு
கொஞ்சம் குளிரட்டும்
இரவும் குளிர் நிலவாய்
நினைவுகள் வந்து சேரும் தருணத்தில்
பாசம் அமைதியின் சூட்டாக
உயிரை தழுவிக்கொள்கிறது
சில பார்வைகள்
முழு வாழ்க்கையை மாற்றும்
தூரம் இருந்தாலும்
மனம் அவளின்
அருகே தங்கும்
விழுகின்ற பொழுது உன்
மடியிலும் எழுகின்ற பொழுது
உன் விழியிலும் இருத்தல்
வேண்டும் இதை விட வேற
என்ன வரம் பெரிதாக
இருந்துவிடப் போகிறது
காதலர் தின வாழ்த்துக்கள் என் அன்பே