காற்றோடு பேசும் மலராய்
உன் மனதோடு பேசி
கொண்டிருக்கின்றேன் நான்

நினைவும்
ஒரு அழகிய
இசை
அது நீயென்பதால்

ஓடிக் கொண்டே
இருக்கும் மனம்
ஒரு நொடி நின்றாலும்
மறு நொடி மனதில்
உன் முகம்

மனதை புரிந்தும்
வலியை தருகிறாயே
என்ற வருத்தமிருந்தாலும்
உன்னை கோபிக்கவோ
வெறுக்கவோ
எப்போதும் துணிந்ததில்லை
இந்த மனம்
அத்தனை காதல் உன்மீது

இன்பமான வலியே
உன் தேடலில்
தொலைதலும்

நீ அருகில்
இல்லையென்ற
வெறுமையில்லை
நொடியேனும்
நகராது
உன் நினைவு
உடனிருப்பதால்

சிரிப்பின் பின்னால்
நின்ற நம்பிக்கை தான் காதல்

காதல் என்பது
இதயத்தால் உணர்ந்த கவிதை
அது எழுதப்பட வேண்டியதில்லை
உணரப்பட வேண்டியது

மழைத் துளியால்
நனைந்த இரவில்
காதல் மென்மையான
மூச்சுகளால் மலர்கிறது

இரவில் பேசும் ஒரு மூச்சு
பகலின் ஆயிரம்
கவிதைகளுக்கு சமம்