நீ இல்லாத நான்
உயிர் இல்லாத உடல்
நிழல் இல்லாத உருவம்
உதிரா மலராய்
நீ மனதில்
மலர்ந்திருக்க
இந்த உதிரும்
மலரும் ஏனோ
உடலின் வளைவுகள்
விரல்களின் மொழியில்
எழுதப்பட்ட ரகசியங்கள்
காற்றுக்கும்
கற்றுக்கொடுத்து
விட்டாயா....
கூந்தல்
கலைத்து
விளையாட
நினைக்கும்போது மட்டும்
வருவேனென்று சொல்லிவிட்டு
நினைவு முழுக்க
நீயாகி போனாய்
உனக்காக நான் இருக்கிறேன்
கவலைப்படாதே
என்பதை விட
பெரிய ஆறுதலை
உன்னிடம் என் மனம்
எதிர்பார்க்கவில்லை
காண துடிப்பது
விழி உனையென்றால்
காலமெல்லாம் காத்திருப்பேன்
என் கண்களின்
ஜீவன் உன்னில்
மௌனத்தில் கூட
இசையாய் ஒலிக்கும்
பாசமே காதல்
காதல்
கணவா
களைத்திருக்கும்
உன் கண்களுக்கும்
ஓய்வுகொடு
கனவில் சந்திப்போம்
💖 பக்கம் 90 / 478
📋 Copied