காலத்தைக் கடக்கும் நினைவுகள்
ஒரே முத்தத்தில் உருவாகின்றன

தூரம் இருந்தாலும் நினைவுகள்
நெருக்கத்தைத் தாண்டும்

விரல்களின் நடையில்
நடுங்கும் ஓர் உடல்
உச்சம் நோக்கிச் செல்லும்
ஆர்வத்தின் இசைதான்

உன்னுடன் பேசும்
ஒவ்வொரு நொடியும்
காலத்துக்கு அப்பாற்பட்ட
ஒரு சொர்க்கம்

தூரம் அதிகமானாலும்
உணர்வு இணைந்திருந்தால்
காதல் என்றும் பிரியாது

ஆயுள் ரேகையை
பற்றி கவலையில்லை
உன் கை ரேகையோடு
இணைந்திருப்பதால்

தொடக்கத்திலிருந்தே
இதயத்துக்குள் குடியேறிய
ஒரே ஆள் அவள்தான்

காதலில் நேரம் நின்றாலும்
மனம் எப்போதும் பறக்கிறது

மௌனம் சில நேரங்களில்
செவியால் கேட்க முடியாத
காதலின் சங்கீதம்

உனை சுமந்தே
காத்திருக்கு கண்களும்
மன கதவையும்
திறந்தே
நீ வருவாயென