காதல்
உன்னை புரிந்துகொள்ள
முயன்ற அந்த நொடியிலேயே
எனக்குள் தொடங்கிவிட்டது
என் இதயத்தை தேடி
அலைகிறோன் இவளது
விழிகளைக் காண்கையில்
இதனை ஏனென்று அறிய
விரும்பவில்லை இவளின்றி
வாழ்ந்திடவும் இயலவில்லை
எதை வாசித்தாலும்
அங்கு வரிகளாக
வந்து நிற்பது
நீ பேசும்
வார்த்தைகளே
பார்வைகள் சந்திக்கும் தருணமே
ஆயிரம் வார்த்தைகளின்
அர்த்தம் சொல்லும்
ஒரே ஒரு வார்த்தை
கேட்டாலே
நெஞ்சம் கவிதையாய் உருகும்
அதுதான் காதல்
தொடர்வதை
நிறுத்திவிடாதே
களைத்துவிடுமென்
பயணம்....
அருகில் இல்லாத தேடல்தான்
உண்மையான காதலை
உணர வைத்தது
மறைந்திருந்து கேட்டாலும்
மனதை மயக்கும்
இசையாய்
என்னை மயக்குகிறாய்
ரசிக்க வைத்தே உனை
உண்ணாத நாட்களுமுண்டு
உறங்காத நாழிகையும்
உண்டு
உனை எண்ணாத
நாட்களென்று
எதுவுமில்லை என்னுயிரே
எங்கோ இருக்கிறாய்
இங்கே கட்டுப்பட்டு
கிடக்கு மனம்
உனதன்பில்
💖 பக்கம் 85 / 478
📋 Copied