சுவை இருந்தும்
பருக முடியாத
ஆறிய தேநீராய்
மனம் அருகில்
நீ இல்லாததால்
தொலைவும்
ஒரு தொலைவில்லை
நீ யென்னை
தொலைக்காத
வரையில்
சிரிப்பை சிதறவிடாதே
சிக்கி தவிக்குது
நாணமும்
ஆழுறக்கத்திலும்
உன் குரல்
செவிகளுக்குள்
கண்களை
மூடி நன்றாய்
தூங்கு என்று
ஆழமான
அதீத காதலுடன்
தமிழ் இலக்கணத்தில்
சொல்லும் பொருளும்
பிரிவதே இல்லையாம்
என்னை பிரியாத
உன் நினைவுகளை போல
மனதிலிருக்கும்
ஆசைகளையெல்லாம்
கொட்டி தீர்த்தவன்
அயர்ந்து போனான்
குழந்தையாய்...!
ஆசை ஆசையாய்
ஆயிரம் கனவுகள் கொண்டு
ஆர்ப்பரிக்கும்
இவளின் மனதில்
ஆறாத காயங்கள் மட்டுமே
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது
போகாதே என்ற
கெஞ்சலுக்காகவே
மிஞ்ச தோணுது
உன் வார்த்தையை
பார்வையின் ஆழத்தில் தான்
உண்மையான பாசம்
மறைந்து கிடக்கிறது
விழிகொண்டு பார்வையால்
செதுக்குகின்றாய் என்னை
சிலையாகின்றேன் நானும்
💖 பக்கம் 82 / 478
📋 Copied