உன் மார்பில்
சாயும் தருணம்
என் வாழ்வின்
எல்லா வலிகளையும்
மறக்க வைக்கும் மருந்து
எனக்காக காத்திருக்கிறாய்
என்ற நினைப்பே
உன்மீதான காதலை
இன்னும்
அதீத வலிமையாக்குது
ஒரு கணம் அருகில்
மறு கணம் தொலைவில்
நீயும் என்ன பொய்மானா
மழையில் நனைந்த பின்
வரும் வாசம் போல
காதல் எப்போதும் புதிதாய் இருக்கும்
உன் கைகள் மட்டும்
என்னை ஓரு உலகத்திலிருந்து
இன்னொரு உலகத்திற்கு
அழைத்துச் செல்கிறது
பார்வை மோதிய நொடியில்
மனம் சொற்களை மறந்தது
தோல் தொடும் தருணத்தில்
உலகத்தின் சத்தமும்
மௌனமாய் மாறுகிறது
காதல் என்பது
இரு இதயங்கள்
இசையும் ஒரு அலை
அதில் யாரேனும்
பின்னடைவு அடைந்தாலும்
அந்த இசை நிறைவடையாது
தடங்களை விட
விரல்களின் நடனம்
அதிகம் பேசியது
துவட்டுவது
உன் கரங்கள்
என்றால்
நீராடுவேன்
மீண்டும் மீண்டும்
என்னவனே
💖 பக்கம் 80 / 478
📋 Copied