மடியில் தலை வைத்து
உறங்கும் கனவுகள்
இன்று அவளின் மார்பில்
உயிர்பிழைக்கும் யதார்த்தம்
மௌனம் காதலின் நிழல்
ஆனால் அதில் தான் உண்மை ஒளி
நெருக்கத்தின் நொடியில்
காதல் காலத்தைக் கூட
நின்றுவிடச் செய்கிறது
இரவின் அமைதியில்
அவளின் மூச்சு ஒலி
ஒரு இசை
உன் அழுத்தமான
முத்தம்
நீ எனக்கே
எனக்கென்று சொல்லாமல்
சொல்கிறது அன்பே
மௌனம் பேசும் நேரத்தில்
ஆசை மட்டும் தான்
குரல் கொடுக்கும்
கண்ணோட்டம் ஒரு கவிதை
அதை புரிந்தவன் தான்
உண்மையான காதலன்
சிரிப்பு போல
எளிதாக வரும் ஆனந்தம்
உண்மையான
அன்பில் மட்டுமே கிடைக்கும்
நித்தம்
ஒரு புத்தம்புது
விடியலாய்
நானும் புதிதாய்
பிறக்கின்றேன்
உன் நினைவு
சாரல்
எனை நனைக்க
இதயம் மீது வைக்கப்பட்ட
நம்பிக்கையே காதலின்
முதல் முத்திரை
💖 பக்கம் 78 / 478
📋 Copied