காத்திருப்பது கண்கள் மட்டும்
அல்ல இதயமும் தான்
கண்கள் உன்னை தேடி
இதயம் உன் அன்பை தேடி
மௌனமாக அணைத்துக்கொள்ளும்
காதலின் சூடே
வார்த்தைகளால்
வெளிக்கொணர முடியாத உணர்வு
என் மன நிறைவென்பது
நீயன்றி வேறில்லை
மனதைத் தொட்டு
உடலைச் சுழற்றும்
காதல் நிமிடமே
ஒரு நிலா இரவு
நொடிக்கு நொடி
காத்திருப்பது
வெறும் பழக்கம் அல்ல
காதல் உருவம்
வசந்தகால தென்றலில்
உனைத் தேடியே
அலைபாய்கிறது
மனம் நந்தவனத்து
வண்ணத்துப்பூச்சியாய்
நீள வேண்டும்
இந்நொடிகள்
நினைத்து நினைத்து
ரசித்திட
நம் நிமிடங்களை
அழகை விட
அன்பு உணர்த்தும்
கண்கள் தான்
நீண்ட பயணத்தில் தேவை
என்னுள்
நினைவுகளை
புதைத்துவிட்டு
எங்கோ உலாவி
கொண்டிருக்கின்றாய்
காதல் மனதை மட்டும் அல்ல
வாழ்க்கையின்
பார்வையையும் மாற்றுகிறது
💖 பக்கம் 76 / 478
📋 Copied