விழிகளுக்கும்
இசை தெரியும்
என்று தெரியாது
உன் விழிகளை
காணும் வரை

உனக்காக நான் இருக்கிறேன்
கவலைப்படாதே
என்பதை விட
பெரிய ஆறுதலை
உன்னிடம் என் மனம்
எதிர்பார்க்கவில்லை

அங்கே நீ
மழை என்றால்
இங்கே நனைகிறேன்
நானும் உன்னோடு
இணைந்தே
சந்தோஷ சாரலில்

மொத்த உசுரயும்
எடுத்து விட்டு
கலைக்கிறாய்
மௌனத்தை
இந்த ஒத்த
உசுரு வாழ்வது
உனக்கென்று
உணராமல்

காற்றாய் தீண்டும்
உன் நினைவில்
கரைகின்றது
என் நிமிடங்களும்
அழகாய்

உன்னை தேடாதது போல்
நடிப்பதென்பது எளிது
தான் அந்த நொடிகளை
நகர்த்தி போவது
தான் மிக கடினம்

அவனுக்கும் எனக்குமான
தூரம் ஒன்றே நிர்ணயிக்கும்
என் புன்னகையின் நீளத்தை

நிலவின் அழகை சொல்ல
வார்த்தைகள் கோடி
நீ எங்கு சென்றாலும் நான்
வருவேன் உன்னைத் தேடி

விரல்களில் பின்னிய
காதல் கதை
உதடுகளில் வெடிக்கும்
நெருப்பாக உருமாறுகிறது

நினைக்க
மறந்த நொடியிலும்
ஏதோவொரு செயல்
உன்னை......
ஞாபகப்படுத்தியே
செல்கின்றது