உன்னில்
நான் காணும் அழகு
என் வாழ்வின்
ஒவ்வொரு நாளையும்
சிறப்பாக்குகிறது
மௌனத்தில் தவழும்
அந்த நொடி
இதயத்தை தீயாக்கும் ரகசியம்
தோஷங்கள்
இல்லாத போதும்
பரிகாரங்கள் செய்கிறேன்
நம் காதலின்
சந்தோஷத்திற்காக
இதயத்தின் அசைவுகளுக்குள்
அவளது பெயர்
ராகமாக ஒலிக்கிறது
உண்மை காதல்
நேரத்தால் சிதைக்கப்படாது
அது நினைவால் நிலைத்து நிற்கும்
கண்ணை மூடினால் கனவாக
திறந்தால் நிஜமாக தோன்றுகிறாய்
மனதுக்குள்
மலர்ந்தாய்
மலராய்....
மனமெங்கும்
மணக்கின்றது
உன் வாசனை....
எனக்காக
எழுதும் பேனாவாய்
இருந்த
நான் உனக்காக
கரையும் மையாகி
போனேன்
உன்னில் தொலைந்த
பின்னே
தேய்ந்து வளரும்
நிலவாய்
நம் காதல்
ஊடலுக்கு
பின் பௌர்ணமியாக
மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ...
💖 பக்கம் 67 / 478
📋 Copied