உள்ளங்கையில்
தாங்குவதை விட
நீ எனை உள்ளத்தில்
ஏந்திக்கொள்
மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ளவரை

தொட்டு பேசாத அணைப்பு
காதலின் நிசப்த உரையாடல்

இதயத்தின் கதவைத் திறந்தவன்
அதில் நிரந்தர வாசி ஆகிவிடுவான்

பேசுவதை கேட்கவே
நேரமில்லை என்றபின்
அங்கு கொஞ்சினாலும்
கெஞ்சினாலும் எந்த
பயனும் இல்லை

கனவுகளை காட்டும் கண்கள்
நிஜத்தை விட
உண்மையாக இருக்கும்

சூடான தேனீர்
பருகியபோதும்
மனதை சில்லென
நினைகிறாய்
மார்கழி குளிராய்
நினைவை தூதனுப்பி

ஊடலின் போதெல்லாம்
சிறு ஆறுதல்
நம் சண்டைகளுக்கு
ஆயுளில்லை என்ற
உன் வார்த்தையே

கூட்டத்தில்
இருந்தாலும்
கூண்டு கிளியாய்
அடைபட்டு
விடுகிறேன் உன்னுள்

நாம் இருக்கும் இடம்
தூரமாக இருந்தாலும்
உன் மனதில் நானும்
என் மனதில் நீயும்
மிக அருகில் தான் இருக்கிறோம்

இதனால் தான் பிடிக்கும்
என்ற காரணமே இல்லாமல்
பிடித்தது உன்னை மட்டும் தான்