காலில் மாட்டி
கொண்டாலும்
உன் சத்தங்கள்
சங்கமிப்பது
என் இதயத்தில்
என்னவன்
காதல் சின்னமாய்
அவள் கண்களை பார்த்து தான்
கவிதை என்ற பெயரில்
கிறுக்க தொடங்கினேன்
வரிகளாக அவளுக்காக
நீயறியாமல்
உனை சு(வா)சிப்பதும்
ஒரு சுகம் தான்
காதல் கணவா
விரல்கள் தேடும் பாதையில்
உடல் கவிதையாக எரிகிறது
மழை தூவாது இருக்கலாம்
ஆனால் அவளின் நெருக்கம்
ஒரு வெந்நீர்க் குளியலாக இருந்தது
இந்த practical உலகத்தில் கூட
உன்னுடன் பேசும் நேரம் மட்டும்
கனவு போல இருக்கிறது
வாசல் மூடிய பிறகு மட்டுமே
காதல் முழுமையாக
தன்னை வெளிப்படுத்தும்
பார்வை ஒன்று போதும்
பரவாயில்லை என்ற வாழ்க்கையே
பாசமாக மாறுகிறது
தொட்ட இடத்தில்
தீ மூண்டாலும்
காதல் நெஞ்சத்தில்
மலர்வதுதான் விசித்திரம்
கைகள் இணைந்திருந்தால்
மட்டுமா காதல்?
இதயம் இணைந்திருந்தால்
தான் காதல் தொலைவில்
இருந்தாலும் தொலையக்கூடாது
💖 பக்கம் 65 / 478
📋 Copied