💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தோற்று மட்டும் போகவில்லை
தொலைந்தும் போய்விட்டேன்
உன்னொற்றை பார்வையில்
content_copy
மழை தரும் மண்வாசனை போல
காதலின் நினைவுகள்
மனதின் அடுக்குகளில்
நிதமாக தேங்கி இருக்கின்றன
content_copy
திடீர் மழையாய்
நீயும் அவ்வப்போது
நனைக்கிறாய்
காதல் மழையில்
கன்னத்தை தீண்டி
content_copy
மனதை தாண்டி
உயிரை கலந்துகொள்ளும்
அன்பு தான்
காலத்தை மறக்க வைக்கும்
content_copy
கண்களை மூடினாலே
கனவாக வந்து
தங்கி கொ(ல்)ள்கிறாய்
விழிகளுக்குள் விலகாமல்
content_copy
மூச்சின் வெப்பம் கூட
மௌனத்தை எரித்து விடுகிறது
content_copy
நீ பேசினாலும் வலிக்கிறது
நீ பேசாவிட்டாலும்
வலிக்கிறது இரண்டும்
அற்ற நிலையில்
இதயம் கிடந்து துடிக்கிறது
content_copy
தொடுதலில் மறைந்திருக்கும் நெருப்பு
இரத்தத்தையே சுழற்றுகிறது
content_copy
உனை தேடி
மனம் தொலையவே
ஊடலை தருகிறாயா
content_copy
மூச்சு நெருங்கும் இடைவெளி தான்
காதலின் உண்மை தூரம்
💖 பக்கம் 64 / 478
arrow_back
arrow_forward
📋 Copied