நீ பேசாமல் இருந்தாலும்
உன் கண்கள்
காதலின் கதை சொல்லும்
நீ பேசாமல் இருந்தாலும்
உன் கண்கள்
காதலின் கதை சொல்லும்
என் வாழ்க்கையின்
அழகிய வரி நீ தான்
எப்படி அலங்கரித்து
கொண்டாலும்
உன் வசீகர
பார்வையின்
முன் அத்தனையும்
அலங்கோலம் தான்
இருவர் சேர்ந்து சிரிக்கும்
ஒரு தருணம்
ஆயிரம் கவிதைகளுக்கும் சமம்
உன் பெயர் உதடுகளில்
மௌனமாகத் தோன்றும்போது கூட
என் இதயம் அதை
ஓசையாக உனக்கே சொல்லிவிடும்
ஒரு நினைவின் மீது
வீழும் புன்னகை
காதலின் ஆரம்பம்
உடல் பேசும் மொழி
இதயம் புரிந்துகொள்ளும் நேரம்தான்
உண்மை பிணைப்பு
பாசத்தின் மெளனம்
சில சமயங்களில்
சொற்களைக் காட்டிலும்
பெரிதாக உரையாடும்
நான் தியானிக்கும்
பூங்காற்று நீ
என் தியானத்தின்
உயிர் மூச்சு நீ
ஆபத்துக்களை
பற்றி கவலையில்லை
ஆட்கொள்ள நீயிருப்பதால்
நம் வாழ்க்கை பாதையில்