என் கவலைகளை
கேட்க வேண்டாம்
உன் பார்வை
மட்டும் போதும் ஆறுதலுக்கு
என் கவலைகளை
கேட்க வேண்டாம்
உன் பார்வை
மட்டும் போதும் ஆறுதலுக்கு
அணைத்து கொள்ளும் நொடி
உணர்ச்சிகள் பேசும்
மொழியாக மாறும்
என் கோபத்தின்
முற்றுப் புள்ளி நீ
புன்னகையின் பின்னால்
இருக்கும் கவலைக்கே பதில்
அவன் பார்வை
உள்ளம் நெருங்கும்போது
தூரம் என்னும்
வார்த்தை அழிகிறது
வாழ்தலின்
சுகமறிந்தேன்
உன் காதலில்
உன் தீண்டலின் மோகத்தில்
காதல் அலைகள்
கரைபுரளும் என் நெஞ்சில்
காதல் என்பது
வார்த்தைகளில் இல்லை
அது ஒரு பார்வையின்
நடையில்தான் தெரியும்
இயல்பாய்
இருந்தே
இதயத்தில்
நுழைந்து
விட்டாய்
எத்தனை புயலடித்தாலும்
இதய கதவை எனக்காக
திறந்தே வைத்திருக்கிறாய்
என் மனமறிந்து