கதை பேசிக்கொண்டே வா
காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்
உன் மௌனங்கள் பேசும் 💕🎵

பார்வையில் விழும் ஒளி
இதயத்தின் இருளை கரைக்கும்

உன் சிரிப்பில் என் உலகம்
உன் பார்வையில் என் உயிர்

காலம் போகாது
காதலின் நினைவு மட்டும்
தைரியமாக முடிவில்லாமல் தங்கும்

கண்கள் பேசும் நேரத்தில்
மொழிகள் எல்லாம் சுமைதான்

மௌனத்தின் நடுவே
அசைவுகள் பேசும் மொழி
விருப்பத்தின் வெளிப்பாடு

ஒரு மௌனத் தொடுதலில்
நிறைந்திருந்தது
நான்காவது காதல்

என்னை நேசித்தவர்களை நான்
அழவைத்தது இல்லை நான்
நேசித்தவர்கள் தான்
என்னை அழவைக்கிறார்கள்

எழுதவே நினைகிறேன்
உன் மேலான
அத்தனை காதலையும்
என்னை நேரில்
பார்க்கும்போது
உன் கண்கள் பேசும்
மொழிதனை பார்க்கவே
என் கண்கள்
தவம் கிடைக்கின்றது கள்வனே

காதல் ஒரு மொழியாக இருந்திருந்தால்
அதை புரிந்துகொள்ள
காது தேவையில்லை
ஒரு இதயம் இருந்தாலே போதும்