வண்ணங்களில்
வாழ்க்கையில்லை
என்றாலும்
உன் எண்ண அழகில்
வண்ணமானது
நம் வாழ்க்கை
கூந்தலை அலங்கரிக்கிறாய்
பூக்களில் மனமோ
கோர்க்குது ஆசைகளை
மாலையாய் நாம் சூடிக்கொள்ள
மனம் அறியாமலே
ஒருவரின் பெயரை நினைக்கிறது
அதுதான் காதல்
மாலை நேரத்தின் அமைதியில்
நினைவுகள் காதலின்
மென்மையான அலைகளாக வந்து
இதயத்தை சுற்றிக்கொள்ளும்
காதல் மொழி பேசாமல்
கண்களின் ரகசியம்
சொல்லிக் கொண்டே இருக்கிறது
கோடி விண்மீன்கள்
நடுவே தனித்துத் தெரியும் நிலவு போல
கோடிக் கூட்டத்திலும்
என் கண்கள்
தேடுவது உன்னை மட்டுமே
புதிதாய் உணவு
நீ சமைக்க
காதலோடு நானும் அதை ருசிக்க
அறுசுவையில் ஒன்று
கூடிப்போனது உன்னால்
பார்வையில் நிறைந்த வெப்பம்
உடலை மட்டுமல்ல
ஆன்மாவையும் உருக்குகிறது
கையில் பிடிக்காமல்
சுவாசத்தைப் பிடித்துக் கொண்ட
உணர்வே அவள் அருகில்
இருந்த உண்மை
நீ பேசும் போது
என் மனம் காதலிக்கிறது
நீ அணைக்கும்போது
என் ஆன்மா முழுவதுமாக
உன்னுடையதாகிறது
💖 பக்கம் 62 / 478
📋 Copied