இரு இதயங்கள்
அமைதியாய் பேசும்போது
வார்த்தைகள் தேவையில்லை
இரு இதயங்கள்
அமைதியாய் பேசும்போது
வார்த்தைகள் தேவையில்லை
குடையிருந்தும்
நனைகிறேன்
காதலின் சாரலில்
சுகமாய்
அலங்கோலம்
கூட அழகுதான்
நீ கலைத்து
விளையாடும்
போது (கூந்தல்)
சில முகங்கள்
வாழ்நாள் முழுதும்
மனதில் இடம் பிடிக்கும்
பேசாமலே நெருக்கம் உணர்த்தும்
சாய்வுகளே காதலின்
உண்மையான மொழி
எனக்கான
உன் சில நொடிகளில்
பல யுகங்கள்
வாழ்ந்து விடுகிறேன்
நான் மகிழ்வாய்
என்னவனே
கண்கள் பேச
இதயம் கேட்கும்
அந்த நொடி தான்
ரொமான்ஸின் உச்சம்
அதிக கோபம் கொண்டதும்
அதை விட
அதிக பாசம் கொண்டதும்
உன்னிடம் மட்டுமே
மொத்த உலகமும்
அழகாய் தோனுது
சட்டென
உன் நினைவுகள் தீண்ட
நினைவில் நிற்கும்
ஒரு நொடிதான்
வாழ்நாளை மாற்றும் காதல்