நீ தாமதமாக வந்தாலும்
அது தனி அழகே
நீ கோபமாக சென்றாலும்
அது பேரழகே

சத்தமில்லாமல் நெருக்கம் பேசும்
அதுதான் ரொமான்ஸின்
உண்மை மொழி

என்னை நீ
நினைக்க
மறந்தாலும்
உன் நினைவுகள்
கலந்தேயிருக்கும்
என் மூச்சிக்காற்றோடு

உன் பார்வையின் நிழலிலும்
என் மனது
காதலின் ஒளி தேடுகிறது

கண்களில் சிக்கி விடும் நேரத்தில்
உலகின் எல்லா கதைகளும்
ஒரு நொடியின் கதை போல தோன்றும்

உலக அதிசயங்கள் எல்லாம்
கல்லால் ஆனவையடி இல்லையேல்
உன்னையும் சேர்த்திருப்பார்கள்

நீ நிலவு
அழகில் மட்டுமல்ல
தொலைவிலும் நான்
உன்னை ரசிக்க முடியும்

நீ கொடுக்கும்
எதிர்பார்ப்புகளும்
எனக்கு போதைதான்
உனக்காக காத்திருக்கயில்

நீ என் அருகில் வந்தால்
சுவாசமே இனிப்பு ஆகிறது

அரை நொடி
நிகழ்வையும்
ஆயுள் வரை
அசைபோடுவதுதான்
காதல்