வசந்தகால தென்றலில்
உனைத் தேடியே
அலைபாய்கிறது
மனம் நந்தவனத்து
வண்ணத்துப்பூச்சியாய்

சத்தமின்றி இதயத்தை
துளைக்கும்
உன் மௌனத்தை
விடவா
ஒரு கூர்மையான
ஆயுதம் இவ்வுலகில்
இருக்கப்போகிறது

சுதியோடு இசைக்க
காத்திருக்கு
சலங்கையும்
உன் ரசனைக்காய்
நீ வருவாய் என

காதல் என்பது
இரண்டு இதயங்கள்
ஒன்றாக துடிப்பதல்ல
ஒரு இதயம்
அடுத்த இதயத்திற்காக துடிப்பதே
உண்மையான காதல்

மறுமலர்ச்சியாய்
மலரும் நினைவுகள்...
மதி மயங்கியே
போகிறேன்...
மயக்கிய
வார்த்தைகளால்...
அன்றும்
இன்றும்
என்றும்
தெளிவடையாமல்...
அன்புக்கு அடிமையாய்...

உன்னை நினைக்கையில்
சிந்துகின்ற கண்ணீர்
கனமானது ஏனெனில்
அதில் கரைவது நான்

பேசா நொடிகளில்
பேசி கொல்கிறாய்
பார்வையில்

நேசிக்கிறேன் உன்னை
முதலாக மட்டுமல்ல
முழுவதுமாக

பிரிவுகூட சுகமே
நீயும் எனைக்காண
தவித்திருக்கும் போது

உன்னை தாண்டி
எதுவுமில்லை
என் சந்தோஷத்தின்
எல்லை