💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
ஒரே பெயரை இதயம்
நாள்தோறும் உச்சரிப்பதே
காதலின் பிரார்த்தனை
content_copy
எப்படி எழுதினாலும்
ரசிக்கின்றாய்
இதழ்வரி கவிதையை
content_copy
அவளின் சிரிப்புக்கு பிறகு
சோகமே வரக்கூடாது போல
ஒரு பயம் தோன்றுகிறது
content_copy
வானில்
நிலவில்லாத நாட்கள்
கூட உண்டு
என்னுள்
நின் நினைவில்லாத
நாட்கள் என்பதே இராது
content_copy
மூச்சின் மென்மையான ஓசையில் கூட
பாசம் மனதை சுற்றி
அலை போல வந்து ஆட்கொள்கிறது
content_copy
என் சோகத்தில்
உன் மனம்
வாடுவதால்
அணிந்து கொள்கின்றேன்
புன்னகையெனும்
கவசத்தை
content_copy
இரை தேடும்
பறவையாய்
உனை தேடுது
இதயம்
content_copy
உனக்கான வேண்டுதலில்லை
நீயென்னுள் நலமாயிருப்பதால்
இது எனக்கான
வேண்டுதலே
நீயென்றும் நலமுடனிருக்க
வேண்டுமென்று
content_copy
என் கண்ணீரில்
புரியாத உணர்வா
உனக்கு என் கவிதைகளில்
புரிந்துவிட போகிறது
content_copy
பார்வையில் பசி இருந்தால்
அது ஆசை
உயிரில் ஆசை இருந்தால்
அது காதல்
💖 பக்கம் 58 / 478
arrow_back
arrow_forward
📋 Copied