நீ சென்ற பின்னே
நானும் பயணிக்கின்றேன்
உன் நினைவுகளோடு
மன பாதையில்

பார்வை முத்தமிடும் முன்
ஆசை முழு உடலையும்
தீயில் வைத்துவிடுகிறது

மாலை என்றாலே
கோர்வையாய்
மனதை மயக்குது
உன் வார்த்தைகள்
எனை சூடிக்கொள்
என்று மாலையாய்

கண்களை மூடினால்
கனவாய் திறந்தால்
நிஜமாக நடக்கும் ஆசை

காதல் என்பது
கண்களால் உணர்வது இல்லை
இதயங்களால்
சேர்ந்து எழுதும் கவிதை

உன் பாசம் நிறைந்த
நெருக்கத்தில் என் இதயம்
புதிய வாழ்வை தொடங்குகிறது

நிலா பார்க்கும் போது கூட
அவளின் முகம் நினைவாகிறது

உன் மனதை
வாசித்த போது
தான்
என் எண்ணங்களும்
எழுத்தானது
நீயும் என்றோ
வாசிப்பாய் என்றே

ஒரே பார்வையில்
வாழ்நாள் கனவுகள் உருவாகும்
அதுதான் ஆழமான காதல்

மென்மையான விரல் தொடுதலில்
முழு உலகமே உருகுகிறது