💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
எத்தனையோ பேசிய
எத்தனையோ வாதாடிய
இதழ்கள் ஏனோ மௌனம்
தழுவின நாம் ஒன்றாய்
சந்தித்த போது அன்பே
content_copy
புரியாமலே
நெருங்கிய வார்த்தைகள்
உருக்கமாக காதலிக்கச் செய்கின்றன
content_copy
உன் விரல்கள்
என்மீது ஓடும் போதே
என் உடல் உருகுகிறதே
content_copy
இதயத்தின் ஒவ்வொரு
துடிப்பிலும் உன் ஞாபகங்கள்
கலந்திருக்க நீ தொலைவில்
இருந்தாலும் என் நினைவுகளில்
என்றும் பக்கம் தான்
content_copy
நேரமில்லை என்றாலும்
ஆசைக்கு எல்லை இல்லை
என்ற உண்மை
அவளிடம் தெரிந்தது
content_copy
உனக்காக
எழுதும் வரிகளை
மனதுக்கே அஞ்சல்
செய்துகொள்கின்றேன்
வேறுயாரும்
ரசித்திட கூடாதென்று...
content_copy
நாற்றோடு
கதை பேசும்
காற்றாய் மனதை
உரசுகிறாய்
நீ காதல்
மொழி பேசி
content_copy
இருளில் கூட
பொலிவூட்டும் ஒன்று இருந்தால்
அது காதலின் தீப்பொறி
content_copy
மனம் தன்னுடைய திசையை
கண்டுபிடிக்காத தருணமே காதல்
content_copy
எழுதவே நினைகிறேன்
உன் மேலான
அத்தனை காதலையும்
என்னை நேரில்
பார்க்கும்போது
உன் கண்கள் பேசும்
மொழிதனை பார்க்கவே
என் கண்கள்
தவம் கிடைக்கின்றது கள்வனே
💖 பக்கம் 56 / 478
arrow_back
arrow_forward
📋 Copied