யாருமற்ற சாலையில் உடன் பயணிக்கிறது உன் நினைவுகள் மட்டும் பேரிறைச்சலுடன்
உன் இதயத் துடிப்பில் என் பெயர் ஒலிக்கக் கேட்டேன்
இதயம் தொட்ட பாசம் வாழ்வின் புயலிலும் நிம்மதியாக தாங்கும் மரமாகிறது
தித்திக்கும் உன் நினைவுகளை சந்திக்கும் போதுதான் காத்திருக்கும் வலிகள் கூட காணாமல் போய் விடுகின்றது என் கனவுகள் நீயாக இருக்கும் வரை என் கவிதைகள் உன் பெயர் சொல்லும் அது விதியின் செயல் அல்ல நீ செய்த மாய வலை...! (யாவும் கற்பனை)
நேசிப்பது காற்று போன்றது அதை தெளிவாக காண முடியாது ஆனால் உணர முடியும்
மௌனத்தில் பிறக்கும் மூச்சுகளுக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படாது
மௌனத்தை உடைக்கும் பார்வையில் இதயம் ஒரு இனிய இசையாக உருகி விடுகிறது
நீ நீயாகவே இருப்பதால் உனை எனக்கு பிடிக்கும்னு ஆரம்பிச்சி எனக்காக மாறு என்பதில் தொடங்குது பிரிவும பிரச்சனைகளும்
மூடிய கண்களிலும் காதலியின் முகம் தெளிவாக தெரிந்தால் அதுதான் உண்மையான காதல்
மௌனம் பேசும் இடம் எங்கு என்றால் இருவரும் அருகில் இருக்கும் அந்த நொடி