மௌனத்துக்குள்ளே நுழையும்
அன்பு தான்
ஆழமான காதலின் உருவம்
மூச்சுகள் கூட
ஒன்றோடு ஒன்று கலக்கும்
தருணமே பரவசம்
மௌனமாக காதலித்தாலும்
மனம் பேசிக்கொண்டே இருக்கும்
சிரிப்பு ஒருவருக்காக தோன்றும்போது
காதல் ஒரு கவிதை போல
உயிர் பெறுகிறது
மையும் சொல்லும்
உன் மீதுள்ள
மையல்களை
கவிதையாய் கரைந்து
விழிகள் எழுத
எனை ஆளும்
அன்பு நீயென்றால்
ஆயுள் முழுதும்
அடிமையே
நான் உனக்கு
தொடர்கின்றாய்
என்றே
தொடர்ந்தேன்
நீ முற்றுப்புள்ளி
வைத்ததை அறியாமல்
மன ஏட்டுக்கு
நீள்கின்ற
நிமிடங்களும்
நொடிகளாய்
கரைந்திடுதே
உன்னில்
மூழ்கிவிட்டால்
எனைத்தேடி
என்னிடமே தருவாய்
என்ற நம்பிக்கையில்
தெரிந்தே தொலைகிறேன்
உன்னில்
உன் வீட்டு
பறவையின் கீச்சலிள்
என் மனதிலும்
முளைக்குது சிறகுகள்
பறந்து வர உன்னிடம்
💖 பக்கம் 50 / 478
📋 Copied