கடலுக்கு ஓசையாய்
மனதுக்கு வீணை நீ
இதய ராகமாய்

தொடாத தருணமே
எரியும் கனவாக மாறுகிறது

வருவேன்
என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்

உன்னிடத்தில்
மிண்டும் உரையாடலை
தொடங்குவதற்கு
உனை என்னிடத்தில்
தக்கவைப்பதற்கு
இதுவும்
ஒரு புத்திசாலித்தனமான
முட்டாள்தனம்

விரல்கள் இணையும்
அந்த நேரம்
காற்று கூட
பதட்டம் அடைகிறது

மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்...

ஆயிரம் சமாதானங்களையும்
ஒன்றுமில்லாமல் செய்துவிடுறது
அவளின் ஒற்றை அணைப்பு

சுட்டெரிக்கும்
வெயிலிலும்
மழைசாரலாய்
நீயென்னை
கடக்கயில்
இதயமும்
நனையுதே

விழிகள் பேசும் மொழியில்
ஆயிரம் வருடங்களின்
காதலைக் கேட்கிறேன்

எத்தனை துன்பம்
இருந்தாலும்
மறந்து போகிறேன்
உன்னோடு பேசும்
அந்த நேரத்தில் மட்டும்...