நீ சொல்லும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தில்
ஒரு நிலையாக நிலைக்கிறது

நினைவு கடலில்
நீந்துகின்றேன்
கரை சேர்த்திட
வருவாயென...!

சொற்கள் தேவையில்லை
பார்வை பேசும் அந்த நொடி
ரொமான்ஸின் உச்சம்

மூச்சின் நடுவே
முளைக்கும் ஆசை
நினைவுகளைக் கடந்த
தீப்பொறி ஆகிறது

விருப்பத்தின் அலை
மனதை சுற்றி எரியும்
தீ போல பாய்ந்து
எல்லைகளை மறக்கச் செய்கிறது

மழைத்துளி எண்ணிக்கையிலும்
அலை கரை மோதும்
எண்ணிக்கையிலும்
என் இதயத்துடிப்பின்
எண்ணிக்கையிலும்.
உன்னிடம் காதல் சொன்னேன்

மூச்சுகள் மோதும் நொடி
நேரம் தன் பாதையை மறக்கிறது

மௌனத்தில்
புன்னகை நுழைந்தால்
அது ஒரு ரொமான்ஸ் பூத்த தருணம்

என் இதயத்தை தேடி
அலைகிறோன் இவளது
விழிகளைக் காண்கையில்
இதனை ஏனென்று அறிய
விரும்பவில்லை இவளின்றி
வாழ்ந்திடவும் இயலவில்லை

எவ்வளவு தொலைவில்
நீ இருந்தாலும்
உன் நினைவுகள் மட்டும்
என்னை தொல்லை செய்து
கொண்டே இருக்கின்றது