ஒருவரைப் பெறுவது மட்டுமே
காதல் என்று அழைக்கப்படுவதில்லை
காதல் என்பது ஒருவரின்
இதயத்தில் ஒரு இடத்தைப்
பிடிக்கும் என்று கூறப்படுகிறது

கண்கள் பேசும் காதல்
மெளனத்திலே வெறித்தனமான
உணர்வுகளை உதிர்த்துவிடும்

உருகும்
ஒரு நிலை வந்தால்
உருகிட வேண்டும்
உனக்குள் அன்பே

நிமிடம் தவறியும்
நினைவோ தவறாதவள்
காதலின் உண்மை உருப்படியாகும்

சாயும் நேரத்தில் கூட
ஒரு தடவை தொட
விரும்பும் விரல்கள்
உணர்வுகளை விட
ஆழம் சொல்கின்றன

தொடாமல் தொட்ட உணர்வே
ரொமான்ஸின் உச்சம்

மார்கழி குளிர்
என்னயும்
கோலம் போட
வைத்தது
என்னவன்(வள்) கன்னத்தில்
(மார்கழிக்கவிதை 😁)

இதயம்
இடம்மாறினால்
உதயமாகும் காதல்
இதழ்கள் இடம் மாறினால்
உருவாகும் கவிதை

நீயில்லை என்றால்
என் இதயம்
இசையற்ற வீணை

நினைவுகளின் அலைகள்
காதலின் கரையில்
மெல்ல வந்து
இதயத்தை தொடும் போதே
பரவசம் எழுகிறது