சுவாசம் போல
கலந்த உணர்வுதான்
ஆழ்ந்த காதலின் உண்மை
என்னை மீட்க முடிகின்ற
வார்த்தைகள்
எங்கிருந்து வருகின்றதோ
அங்கே அவள் இருப்பாள்
கை நெருங்கும்
அந்த தருணம்
இதயத்தின் மொழியை மாற்றுகிறது
உலாவி
கொண்டே இரு
நானும் உனை
ரசித்து கொண்டேருக்க
மன வானில்
நினைவில் கொண்ட
ஆசைகளும்
கனவில் கண்ட
பேராசைகளும்
உன்னை சேர்ந்திட தான்
இத்தனை மெனக்கெடல்
எதற்கு
ஒரு நொடியென்
விழிகளை வாசித்தால்
மன ஏட்டை
புரிந்து கொள்வாயே
உன்னை காதலிக்க
ஆரம்பித்த நாளிலிருந்து
என் நாட்கள் காலண்டரில் இல்லை
அவை உன் நினைவுகளில்
மட்டுமே இருக்கின்றன
வெள்ளை காகிதத்தில்
வெறுமையாய்
கிறுக்கி கொண்டிருந்த
எனையும் ரசனையாய்
எழுத வைத்தது நீ
என்மீது கொண்ட
காதல்
நாசிக்குள் நுழைந்து
உயிர்வரை சென்று
நேச உறவாடும்
உன் (சு)வாசத்தை
போல் எதுவும் போதை
தருவதில்லை எனக்கு
தூரமிருந்து ரசிக்கிறேன்
பக்கமிருந்து தொலைத்த
உறவுகளை
💖 பக்கம் 45 / 478
📋 Copied