கண்ணோடு
நீ கலந்ததிலிருந்து
கண்களும் அடிக்கடி
ரசிக்குது
கண்ணாடியில் என்னை
இமை கதவுகள்
மூடியதும் விழிவீட்டினுள்
நுழைந்துவிடுகிறாய்
கனவாக...
யார் இருந்தாலும் இல்லாத
உன்னை தான் சொந்தம்
கொண்டாட ஆசை
படுகிறது என் மனசு
உன் வெப்பமான சுவாசம்
என் தோலில் படும்போது
என் இரத்தம்
நீர்க்குமிழி போல கொதிக்கிறது
உதடுகள் அருகில்
வந்த தருணம்
உலகமே மறைந்துவிடும்
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில் வரும்
கனவு நீ
உன்னைத் தவிர
வேறெதுவுமேயில்லை
என் நினைவிடம்
சிரிப்பில் தங்கிய பாசம்
மனதின் ஆழத்தில் வீடு கட்டுகிறது
இருளுக்குள் அடைக்கலம்
கொண்ட ஒளியாய்
தேடுகிறேன்
நானும் உன்னில்
அடைகலம்
நெருக்கம் அதிகரிக்கும்போது
வார்த்தைகள் தானாகவே விலகுகின்றன
💖 பக்கம் 44 / 478
📋 Copied