காதல் சொற்களில் இல்லை
தோலில் ஓடும்
உன்னத உணர்வில் உள்ளது

இதயம் தொட்ட பாசம்
வாழ்வின் புயலிலும்
நிம்மதியாக தாங்கும் மரமாகிறது

என் அத்தனை
நம்பிக்கையும்
நீ என்ற
வார்த்தை மட்டுமே

ஆள்தல் நீயென்றால்
வாழ்தலும் வரமே
காதல் ராஜ்ஜியத்தில்

என் காதலும்
அழகு தான்
உன் இதயமெனும்
கருவறைக்குள்
சுவாசிப்பதால்

சருமத்தின் சூட்டில்
நேரமே திசை
தெரியாமல் போகிறது

என் தேடலில் கிடைத்த
மிக சிறந்த பொக்கிஷம்
நீ மட்டுமே

என்னுள்ளும் வசந்தம்
நீ வாழ்வில்
வந்த பின்னே

உன் அணைப்பில் மூச்சு மறக்கிறேன்
உன் முத்தத்தில் உலகமே மறக்கிறேன்

மௌனத்தில் உருக்குகின்ற ஆசை
உடல் தொடும் முன்
உயிரை தொட்டுவிடும்