காதல் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தெரியாமல்
காதலித்துவிட்டு அதை
புரிந்து கொள்ள
நினைக்கையில்தான்
வாழ்வில் மரண
வலிகளை உணர்கின்றோம்
காதல் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தெரியாமல்
காதலித்துவிட்டு அதை
புரிந்து கொள்ள
நினைக்கையில்தான்
வாழ்வில் மரண
வலிகளை உணர்கின்றோம்
மூச்சுக்குள் சிக்கவைக்கும்
அந்த வாஞ்சை
வார்த்தைகளில் சொல்ல
முடியாத ராகம்
உதிர்ந்த போதும்
வாசம் தரும்
மலரின் இதழ்களாய்
மனதில் சுவாசிக்கிறாய்
நீ பிரிந்த போதும்
சிரிப்பு ஒரு முகத்தில் அல்ல
ஒரு உயிரில் பதிந்தது
மழைத்துளி விழும் ஒலி கூட
காதல் நெஞ்சில் இசையாக மாறும்
கண்ணோட்டம்தான்
தொடக்கமென்றால்
அதற்குப் பின்னே
உடல் மொழி பேசும்
கதைதான் தொடரும்
உன் தேடல்
எதுவாகவும்
இருக்கட்டும்
என் தேடல்
நீயே
காதல் என்பது
மனம் கேட்கும் இசை
காதுகள் கேட்காத மௌனம்
நினைவு சின்னங்கள்
தேவையில்லை
உனை நினைக்க
நினைவே
நீயான பின்
மனமெங்கும்
கண்கள் சொன்ன மௌனம்
காதலின் மொழியாக மாறியது