எனைத்தேடி
என்னிடமே தருவாய்
என்ற நம்பிக்கையில்
தெரிந்தே தொலைகிறேன்
உன்னில்

இருளெனை
சூழ்ந்து கொண்டாலும்
உன் நினைவொளியில்
வாழ்வேன்
நானும் அழகிய
உலகில் உன்னோடு

நேரம் நின்று போனதுபோல்
உணர்வு கொள்ளும் அந்த நொடி
ரொமான்ஸ் அதுவே

பார்வை தொட்ட
அந்த நொடி
உலகம் மறைந்தது

காதல் என்பது
ஒரு கண்ணியமான நிலை
அது வேதனையை
பூவாக மாற்றும்
சிறப்பான விலைமதிப்பற்ற சக்தி

கண்களில் பேசும் அமைதியே
காதலின் மிக ஆழமான மொழி

நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது

கைகளை பிடித்தவுடன்
இருவாழ்கையும்
இணைந்து போகும்
அது தான் ரொமான்ஸ்

என் கண்கள் தான்
உன்னை பார்க்கவில்லை
துடிக்கும் என் இதயம்
உன்னை நினைக்காமல் இல்லை

சத்தமின்றி நடந்தாலும்
நித்தம் இம்சிக்கின்றதே
மாட்டி சென்றாயா
மனதை கொலுசில்
உனையே நினைத்திருக்க