திரும்பாத நாட்களின்
திரும்பிய பக்கமெல்லாம்
திரும்பத் திரும்ப
தீண்டிவிட்டுச் சென்றது
உனதன்பை மட்டுமே
திரும்பாத நாட்களின்
திரும்பிய பக்கமெல்லாம்
திரும்பத் திரும்ப
தீண்டிவிட்டுச் சென்றது
உனதன்பை மட்டுமே
ஏதோ
யோசிக்க நினைத்து
உன்னை (சு)வாசித்து
கொண்டிருக்கின்றேன்
தொலைவில் இருந்தாலும்
இருதயங்கள் அருகில் துடிக்கும்
நீ அருகில் இல்லாத நேரங்கள் கூட
உன் நினைவுகளால் நிறைந்திருக்கின்றன
காதல் என்றால்
ஒருவரின் இல்லாமையிலும்
அவரை உணர்வதுதான்
நீயும் நானும் தொலை
தூரமாய் காதலை
தொலைத்தே வாழ்கின்றோம்
நீ காதோடு
கிசு கிசுக்கும்
காதல் மொழியை
கேட்டு வானும்
வண்ணம் மாறுகிறது
நாணத்தில்
எத்தனை ஆயிரம்
மொழிகள் இருப்பினும்
மௌனம் மட்டும்
அழகாய் பேசுகிறது
பிடித்தவரிடத்தில்
அவளும் மௌனமானால்
நானும் மௌனமாய்கிறேன்
வார்த்தை பேசாத
ஓர் புன்னகை
ஆசையை அலையாக்கும்
அர்த்தம்
என் இதயத்தில்
வீற்றிருக்கும்
உனக்காகவே
என் ஆலாபனைகளும்
என்னவனே
சுவாசம் கலக்கும் இடத்தில்
சொற்கள் தேவையில்லை