கண்கள் மூடினால்
கனாக்களிலும் காதலித்துவிடுகிறாய்
கண்கள் திறந்தால்
நிஜமாகவே உரிமை கொண்டுவிடுகிறாய்
கடவுளிடம் வேண்டுதலென்று எதுவுமில்லை
வரமாக நீ கிடைத்ததற்கு
நன்றி சொல்லுவதை
தவிர
மனதின் ஆழத்தில்
பிறக்கும் கருணை
வார்த்தையின்றி
பாசமாக உருமாறும்
கண்கள் பேசும் அமைதியில்
கனவுகள் கூட
காதலின் வாசனையை பரப்புகின்றன
தந்தையின் பாசத்தில்
தவழ்ந்த மனம்
உன்னிடமும்
அதையே
எதிர் பார்க்கின்றது
சிறு குழந்தையை
போல்
தயவு செய்து மொழிகளால் பேசு
விழிகளால் பேசாதே
எத்தனை முறை வீழ்வது
உன்னுள் நான்
என்னை நேசித்தவர்களை நான்
அழவைத்தது இல்லை நான்
நேசித்தவர்கள் தான்
என்னை அழவைக்கிறார்கள்
அழகான உரையாடல்
இல்லாத இரவும்
அவளின் ஓர் பார்வை போதுமே
நீ எங்கு இருந்தாலும்
உன் நினைவுகள்
என் அருகிலேயே இருக்கும்
என் இதயம் எப்போதும்
உன் மடியில் இருப்பதை உணருகிறது
அத்தனை
மன சுமைகளுக்கும்
உன் அரவணைப்பு
ஒன்றே போதுமானதாக
இருக்கிறது
என் ஆறுதலுக்கு
💖 பக்கம் 40 / 478
📋 Copied