சிறிய பார்வையில்
மூன்று உலகங்களையும்
அடக்கிக்கொள்ளும்
ஒரு வாஞ்சை துளிர்கிறது
காதல் பிடிக்குள் சிக்கி
காற்றும் திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப் போகட்டும்
காதலர் தின வாழ்த்துக்கள் அன்பே
என்
எண்ணம்
நீயாகிப்போக
எழுதுகோலும்
கிறுக்குகின்றது
ஓய்வின்றி
மையலை மையில்
கலந்து கவிதையாக
மௌனத்தின் நடுவே
நினைவுகள் மெதுவாக வந்து
இதயத்தை பாசத்தின்
அலைகளால் நிரப்புகின்றன
நீயில்லா
பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது
அவன் வாங்கி தந்த
சிகப்பு கல் மூக்குத்திக்கு
இணையாய் சிவந்தது
அவள் முகம் அவன்
தந்த முத்தத்தால்
மனதில் எழும்
ஒவ்வொரு அலைக்கும்
நீயே காரணம் என்றால் அது காதல்
உன்னை நினைக்க வேண்டாம்
என்று என் மனம் சொல்கிறத
ஆனால் அந்த மனது தான்
எப்போதும் உன்னைப் பற்றியே
நினைத்துக் கொண்டிருக்கிறது
மூச்சின் சலனத்தோடு கலந்து
இச்சையின் அலை எல்லைகளை
மீறி உடல் முழுதும் பரவுகிறது
கடலின் ஆழத்தை
அளக்க இயலும்
ஒரு முத்தத்தின்
உருக்கத்தை மட்டும்
யாராலும் சுட்டிக் காட்ட முடியாது
💖 பக்கம் 408 / 478
📋 Copied