காலங்கள் உரையாடும்போது
கைகள் மட்டும் பேச ஆரம்பித்தால்
அதுவே ஆசை
சிறு நினைவுகள் கூட
இதயத்தை நனைத்து
வாழ்க்கையின் வெறுமையில்
பாசத்தின் ஒளியைப் பரப்புகின்றன
உன்னைக் காணாத
நொடிகளில்
நான் இருண்டு
போன உலகத்தில்
இருப்பது போல்
உணர்கிறேன்
இரவில் நிலவாக மாறினாலும்
பரவாயில்லை
உன் கைகளில் மட்டும்
சூரியனாக ஒளிர விரும்புகிறேன்
ஓசை வேண்டாம்
பாஷை வேண்டாம்.
இப்படியே இருந்துவிடேன்
உன் விழி தீண்டலில்
கொண்டாடிட
ஓய்வுநாளை நானும்
சில பார்வைகள்
வாழ்நாளையே மாற்றிவிடும்
மௌனம் கூட
காதல் பாடல்கள் பாடும்
நேரம் உண்டு
கோர்க்கின்றேன்
மலரோடு மனதிலும்
ஒரு மாலை
கனவோடு
நீ வந்தால் சூட
உன் நினைவுகளை
மீட்டியே
வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்
உன் மனதில்
யாரும் நுழையட்டும்
ஆனால் நீ
ஒதுக்கும் இடம்
எனக்கானதாக மட்டுமே
இருக்க வேண்டும்...
💖 பக்கம் 395 / 478
📋 Copied