மூச்சு தடுமாறும் அந்த தூரம்
உடலின் புயலை கிளப்புகிறது
பார்வைதான்
முதலில் காதலிக்கிறது
இதயம் அதன்
பின்னாளில் மட்டுமே
ஒப்புக்கொள்கிறது
காதலின் தீவிரம்
ஒரு சிரிப்பிலேயே
ஆன்மாவை உருகச் செய்கிறது
எதிலும் மனம்
லயிக்க வில்லை
உனை (சு)வாசித்தப்பின்
கவிதையாய்
கள்ள கபடமில்லா
உள்ளம் தான்
குழந்தை என்றால்
நீயும் எனக்கு
குழந்தையே
காதலின் சுவாசமும்
காமத்தின் சூடும்
சேரும் போது
இரவு முழுவதும் கவிதை
காற்றில் உன் சுவாசம்
கலந்து வரும் போது
என் உலகம் முழுதும் நிறைவாகிறது
நேற்று பார்த்த
எதுவும் இன்று
புதிதாயில்லை
உன்னைத்தவிர
உலகம் எவ்வளவு
பெரியதாக இருக்கும்போது
என் இதயம் எப்போதும்
உனது அருகில் இருக்கும்
எத்தனை ஆயிரம்
மொழிகள் இருப்பினும்
மௌனம் மட்டும்
அழகாய் பேசுகிறது
பிடித்தவரிடத்தில்
அவளும் மௌனமானால்
நானும் மௌனமாய்கிறேன்
💖 பக்கம் 394 / 478
📋 Copied