சண்டைகள் கூட
ஒரு விதமான
சுவாரசியம் என்பதை
அறிந்தது உன்னிடம் தான்
சண்டைகள் கூட
ஒரு விதமான
சுவாரசியம் என்பதை
அறிந்தது உன்னிடம் தான்
மயிலிறகாய்
உன் நினைவு
மனதை வருட
மறந்தே போகிறேன்
என்னை...
என்னை
உன் ரசிகையாக்கி
உன்னை
என் கவிஞனாக்கியது
இந்த காதல்
காவியமாய் நிலைத்து
நீயின்றி
நகர்ந்ததுண்டு
நாட்கள்
உன் நினைவின்றி
நகர்ந்ததில்லை
என் நாட்கள்
மனது உருகும் நேரத்தில்
நெருக்கம் பேசும்
கண்கள் மயங்கி விடும் தருணத்தில்
ஆசையின் வெப்பம்
சுவாசத்தோடு கலந்து
உடலை முழுதும் ஆட்கொள்கிறது
என் இதயம் துடிக்கிறதோ
இல்லையோ நன்றாக
நடிக்கிறது உன்னை
மறந்து விட்டேன் என்று
எண்ணங்களுக்கு
பஞ்சமேயில்லை
உனக்கான ரசனையில்
தொடர்கிறது
முற்றுப்புள்ளி இன்றி
நினைக்க நினைக்க
இனிமையாய்
விருப்பமிகு காரணங்கள்
இல்லாமல் இல்லை
அவளை கண்டதும்
காதல் வர
கண்கள் சொன்ன ரகசியத்தை
இதயம் மட்டும் புரிந்துகொண்டது