மழை துளி
விழும் ஒவ்வொரு இடத்திலும்
அவளின் முகம் தெரிகிறது
ஒரே பார்வையில்
வாழ்நாள் கனவுகள் உருவாகும்
அதுதான் ஆழமான காதல்
படிப்பதெதுவும்
மனதில் நிலைப்பதில்லை
மனதோடு
நீ மனப்பாடமாகி
போனதால்
இதயம் அறியாமலே
சிலரை வழிபட ஆரம்பிக்கிறது
பார்வை பேசும் நேரத்தில்
வார்த்தைகள் தேவையில்லை
இதயம் தான் மொழிபெயர்ப்பாளன்
மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்...!
மழை
நின்ற பின்னும்
இலையில்
ஒட்டியிருக்கும்
நீர் துளிகளாய்
நீ சென்ற
பின்னும்
மனதை நனைக்கின்றது
நினைவு துளிகள்
மௌனமாகவே
தீண்டும் விரல்கள்
உள்ளத்தில் குமுறும்
பரபரப்பை தூண்டும்
என் ரசனையை
மறந்து
உன் ரசனையின்
ரசிகையாக
மாறினேன் நான்
சுவாசமும் கனமாக
மாறும் போது
ஆசை நிமிஷங்கள்
நிலையாகின்றன
💖 பக்கம் 387 / 478
📋 Copied