நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தின்
தூய்மையான இசை
உன் பார்வையில்
தொலைந்தது நான்
மட்டுமல்ல என்
கோபங்களும் தான்
குடையிருந்தும்
நனைகிறேன்
காதலின் சாரலில்
சுகமாய்
உன்னில் தொலைந்ததால்
நானும் நலமாக
நாமாய் என்னுள்
பாதையில் நடப்பதற்கே
யாரோ சேர வந்திருக்கிறார்கள்
என்று தோன்றும் நேரம் காதல்தான்
மனதில் மலர்ந்து கொண்டே
இருக்கும் பூவே காதல்
நினைவுகள் அடிக்கடி வந்தாலும்
பாசம் எப்போதும்
புதிதாய் மலர்கிறது
சட்டென
ஏந்தி கொ(ல்)ள்ளாதே
பட்டென
தவிக்குது மனம்
உன் விழியீர்பில்
நிழலும்
நிஜமாகாதாயென
ஏங்குது மனம்
உன் பிம்பமெதிரே
தோன்ற....
மெளனம் பேசும் போது
இருவேற்றுமையிலும்
காதல் நுழைகிறது
💖 பக்கம் 382 / 478
📋 Copied