இதயம் மெதுவாக
நம்பும் உணர்வே
காதலின் முதல் அடையாளம்
என் காதில் நீ
உரைக்கும் காதல்
இரகசியம் என்னை
உறைந்து நிற்க
வைக்கும் மந்திரமடி
கண்கள் கூட
பேச முடியாத அந்த நேரத்தில்
ஆசையின் வெப்பம்
உடலின் எல்லைகளைக் கடந்துவிடுகிறது
காதல் என்பது
இருவரும் சேர்ந்து
உருவாக்கும் ஒரு கனவு
அதை ஒரு நிஜமாக மாற்றும்
ஆற்றலும் அவர்களிடமே இருக்கும்
எனையுன்
இதய சிறைக்குள்
அடைத்து விட்டு
சுதந்திரமாயிரு என்கிறாய்
உன் பார்வை
மட்டுமல்ல
நீ விட்டு
செல்லும்
பாத சுவடும்
ரசிக்க தூண்டுதே
என் மனதை
மௌனத்தில் பேசும்
ஒருவர் இருந்தால்
அந்த நேசம் உண்மைதான்
இதயம் சிலரை நினைக்கும் போது
நேரம் தன் பாதையை மறக்கிறது
உன்னளவுக்கு
அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்
ஒருவரை நேசிப்பது
அவரின் குறைகளை
ரசிப்பதிலிருந்து தொடங்குகிறது
💖 பக்கம் 383 / 478
📋 Copied