நிசப்தமாக ஓடும் நேரம் கூட
காதலின் நிழலைக் கொண்டு
மனதை அலையச் செய்கிறது
தூரத்தில் நீயிருந்தால்
துயரத்தில் துடிக்குது
மனம்
தூரமது மாயமாய் மறைந்து
உன் விழிகளின் நர்த்தனமதில்
உறைந்து நான் போகும்
நொடிகள் நோக்கி நகர்கிறது
என் கடிகார முட்கள்
மழைச்சாரலாய் நீ வர
கவிச்சோலையானேன் நான்!
பேசுவதை கேட்கவே
நேரமில்லை என்றபின்
அங்கு கொஞ்சினாலும்
கெஞ்சினாலும் எந்த
பயனும் இல்லை
இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்...
(ஆனந்த யாழாய்)
தெளிவற்ற நிலையிலும்
தெளிவான உன் ஞாபகங்கள்....
(மலரும் நினைவுகள்)
நான் சொல்லாமல்
இருந்த கவலையை கூட
text tone-ல்
புரிந்து கொள்வது நீ தான்
மழை நனைத்தாலும்
ஒரு சிரிப்பு தான்
மனதை நனைக்கும்
நினைவல்ல என்
நிழலும் உயிர்
கொள்ளும் அவள்
விழி கொல்ல
💖 பக்கம் 373 / 478
📋 Copied