உதிர்ந்த போதும்
வாசம் தரும்
மலரின் இதழ்களாய்
மனதில் சுவாசிக்கிறாய்
நீ பிரிந்த போதும்
இதயம் நேசிக்கும் பெயர்
காலத்தால் மங்காது
என்னிடம் பேச
காத்திருக்கிறாய் நீ
உன்னிடம்
என்ன பேச வேண்டும்
என்று யோசித்து கொண்டே
இருக்கிறேன் நான்
நமக்காக காத்திருக்கிறது காலம்
நாம் இருவரும் பேச போகும்
அந்த அழகிய தருணங்களுக்காக
உன் நிழலும் சுடுகிறதே
காதலின் கதகதப்பாய்
உன் மௌனம் கூட
எனக்குப் பாட்டு
உன் கண்ணீர் எனக்கு ராகம்
உன்னை பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
என் இதயத்துக்குள்
ஒரு புதிய துடிப்பு
காதல் என்பது
அழகின் பொருள் அல்ல
அது மனசின் பொக்கிஷம்
காதல் ஒரு இசை போன்றது
உன் இதயம் தாளமாய்ப் போக
என் உணர்வுகள் பாடலாக மாறும்
உறங்காத
விழிகளுக்குள்
மறைந்துகொண்டு
இம்சிக்கிறாய்
இதமாய்
காதலான ஒரு பார்வை
ஆயிரம் நாள்களுக்குமேல்
வாழும் நினைவாகும்
💖 பக்கம் 353 / 478
📋 Copied