இரவு நேர அமைதியில்
உன் நினைவுகள்
வரும் போது தனிமையே
ரொமான்டிக்காக மாறிவிடுகிறது
காதலை தாமதமாக
ஏற்றுக் கொண்ட நீ
கண்ணீரை மட்டும்
உடனே தருகிறாய்
தொடுதலின் மெல்லிய அதிர்வில்
ஆயிரம் உணர்வுகள் புயலாகின்றன
முகத்தோடு முகம்
சேரும் தருணம்
ஆசையின்
மொழி பேசும் நேரம்
ஒருவரை உண்மையாக நேசித்தால்
அவர்கள் அருகிலிருப்பதற்கு மேலாக
அவர்கள் உள்ளத்தில் நீ வாழ வேண்டும்
எத்தனை வேலைகள் இருந்தாலும்
என் அலைபேசி அதிர்ந்ததும்
நீயாக இருக்கும் என்று
தானாக ஓடும் என் கால்கள்
ரசித்து பார்ப்பது
நிலவை மட்டுமல்ல
உன் முகத்தையும்
தான் அன்பே!
சலிக்காமல்
காத்திருக்கும்
நிலவாக உனை
காண நான்
மௌனத்திலும் காதல் பேசும்
பிரிவிலும் இதயம் தேடும்
மனம் நினைத்த
வேண்டுதலும்
மறந்தே போனது
நீ காட்சியளிக்க
கண்களுக்கு
💖 பக்கம் 351 / 478
📋 Copied