என் காதலும் அனாதை
ஆனது நீ என்னை
விட்டுச்சென்ற பின்
ஒரு மெல்லிய நெருக்கம்
சத்தமில்லா பூகம்பம் போல
மனதில் பரவி விடும்
முற்றுப்பெறாத மாலைதான்
என் முதல் காதலால்
மட்டுமல்ல
உன் முழுமையான
காதலாலும்
மெல்ல நெருங்கும் பார்வை
சொல்லாத ஆயிரம் வார்த்தைகள்
கலைத்து விடுகிறேன்
கவலைகளை உடனுக்குடன்
உன் கண்கள்
கலங்கிட கூடாதென்றே
என்னவனே
ஒவ்வொரு துடிப்பும்
அவளுக்காகத்தான் என்று
உணர்ந்தவன்தான் காதலன்
வார்த்தைகள் இல்லாமல்
பேசும் உன் பார்வை
என் உலகத்தையே
காதலாக மாற்றிவிட்டது
அன்பு அளவிட முடியாதது
உணர்ந்தால் போதும்
நீ பேசாத போது
பேசி மகிழ்கிறேன்
நீ பேசிய
வார்த்தைகளோடு
மனதுக்குள்
உள்ளங்கையில்
தாங்குவதை விட
நீ எனை உள்ளத்தில்
ஏந்திக்கொள்
மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ளவரை
💖 பக்கம் 350 / 478
📋 Copied